இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 10 7 ஆம் எண்ணில் காணப்படும் உண்மையைப் பற்றியச் சிந்தனைகளைப் பார்க்க இருக்கிறோம். “ அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்... வெளிவேட மற்ற அன்பு ... கொண்டிருக்கிறோம் ; உண்மையையே பேசி வருகிறோம் ; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம் ” எனப் பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் ஆறாவது அதிகாரம் நான்கு தொடங்கி ஏழு வரையிலான இறைவார்த்தைகளில் கூறுகிறார். …
இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 10 6 ஆம் எண்ணில் காணப்படும் சுதந்திரம் பற்றிப் பார்க்க இருக்கிறோம். கடந்த அத்தியாயத்தில் நற்சமூகத்திற்கான அடிப்படைகளாக உண்மை, நீதி, சுதந்திரம் போன்றவற்றைப் பற்றி நாம் பார்த்தோம். இன்று நாம், சுதந்திரத்தைப் பற்றி விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம். “ மனிதருக்குக் அளிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரியக் கொடை எதுவெனில் சுதந்திரம். அதாவது, எது வேண்டும் எது வேண்டாம் என்று தேர்ந்துக் கொள்வதற்கானச் சுதந்திரம் ” என்று சோரன் கீர்க்ககார்ட் என்னும் மெய்யியலார் கூறுகிறார். “ இதோ பார் , வாழ்வையும் நன்மையையும் , …
இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 104 மற்றும் 105 எண்களில் காணப்படும் நற்சமூகத்திற்கான அடிப்படை மதிப்பீடுகளான, உண்மை, சுதந்திரம், நீதி ஆகியவைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். கத்தோலிக்க சமூக படிப்பினையின் மூலக்கோட்பாடுகளாக 1. தனிமனித மாண்பு பற்றிய கோட்பாடு – the principle of the human person 2. பொதுநலம் பற்றிய கோட்பாடு - the principle of the human common good 3. துணை அமைப்பு முறை பற்றிய கோட்பாடு – the principle of subsidiarity 4. ஒருமைப்பாடு பற்றிய கோட்பாடு – the principle of solidarity ஆகியவற்றைப் பார்த்தோம…
இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 100 முதல் 103 வரையிலான எண்களில் காணப்படும் ஒருமைப்பாடு பற்றிப் பார்க்க இருக்கிறோம். “ பறவைகளைப் போன்று வானில் பறப்பதற்காக நாம் கற்றுக் கொண்டோம் ; நீரைப் போல தண்ணிரில் நீந்திட கற்றுக் கொண்டோம். ஆனால், பூமியில் சகோதரர் சகோதரிகளாக சேர்ந்துப் பயணிக்கக் கற்றுக்கொள்ளவில்லை ” என மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கூறினார். சாதி, மதம், நிறம், இனம், ஆண்-பெண், கற்றார்-கல்லார், செல்வந்தர்-ஏழையர் எனப் பலவற்றால் பிரிந்துக் கிடக்கிறோம். ஒருவர் இன்னொருவரை விடப் பெரியவர் என காட்டிக் கொள்வதும், சுய நலங்களுக்காக மக்களை…
Social Plugin