புனித அல்போன்சா கல்லூரி நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் 300 க்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பைப் பெற்றனர்

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்  30 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சி தொன்போஸ்கோ வழிகாட்டி நிறுவனமும், தக்கலை இளையோர் கல்வி சேவை மையமும், புனித அல்போன்சா கல்லூரியும் இணைந்து இவ் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.  

இவ்வேலை வாய்ப்பு முகாமில் 1000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பிபிஓ, டெய்லரிங், சாப்ட்வேர், டேட்டா என்ட்ரி, ஆட்டோ மொபைல், பேங்கிங் செக்டார், பார்மசி,  கோர் ரிலேட்டேட், மெடிக்கல் கோடிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் 300 க்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பைப் பெற்றனர். 

வேலை வாய்ப்பைப் பெற்றோர் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், விருதுநகர்,  கன்னியாகுமரி முதலிய நகரங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கலந்து கொண்டவர்களுக்கும், வேலை வாய்ப்பைப் பெற்றவர்களுக்கும் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், கல்லூரி கல்வி இயக்குனர் அருட்தந்தை மைக்கேல் ஆரோக்கியசாமி, முதல்வர் முனைவர் எஸ். இசையாஸ், துணை முதல்வர் ஆர்.‌ சிவனேசன், தக்கலை இளையோர் சங்க இயக்குனர் அருட்தந்தை சந்தோஷ்குமார், அருட்தந்தை ஜோஷி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் பலரும் பயன் பெறும் வண்ணம் இத்தகைய சிறப்பு மிக்க வேலை வாய்ப்பு முகாமை நடத்திய கல்லூரிக்கும், தக்கலை இளையோர் கல்வி சேவை மையத்திற்கும் (TYES), திருச்சி தொன்போஸ்கோ வழிகாட்டி மையத்திற்கும், கலந்து கொண்ட வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கும், வேலை வாய்ப்பைப் பெற்றுப் பயனடைந்த பயனாளர்களுக்கும் தக்கலை மறைமாவட்ட மேதகு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் எஸ்டிபி அவர்கள் தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.‌






Post a Comment

0 Comments