ஒக்ஸ்பாம் (Oxfam) என்னும் அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40 விழுக்காட்டை ஒரு விழுகாட்டினர் கொண்டிருக்கிறார்கள். அது போல, சமுதாயத்தின் கீழ்மட்டதில் உள்ள 50 விழுக்காட்டினர் வெறும் 3 விழுக்காட்டைத் தான் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் பணக்காரர்களின் செல்வம் அதிகரித்து வருகிறது என்பதை அந்த ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் ஒரு விழுக்காட்டினர் வளர்ச்சியடைவதையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எனக் கூறப்படுகிறது. இத்தகைய பொருளாதார சீரற்ற நிலையை திருஅவையானது எதிர்க்கிறது. இத்தகைய சூழ்நிலை நிலவும…
மானிடர் செய்யும் தொழிலும் அதுபோல் வேலையும் மனித மாண்போடு பிணைக்கப்பட்டது. இதைப்பற்றி Docat நூலின் 143 மற்றும் 144 எண்கள் பேசுகின்றன. வேலை அல்லது தொழிலைப் பெறுத்தவரைக்கும் லாபம், அல்லது அதிலிருந்து கிடைக்கும் ஊதியம் அவசியமானது. தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் லாபத்திற்காகத் தான் வேலையைச் செய்கிறார்கள். அதுபோல அங்கே வேலை செய்யக்கூடியவரும், ஊதியத்திற்காகத் தான் வேலை செய்கிறார். பணம் ஈட்டுதல், செல்வம் சேர்த்தல், தொழிலை மேம்படுத்துதல் போன்றவை வேலையோடு தொடர்புடையவை. இதைப் பற்றிய கவலையானது வணிக உலகின் பகுதியாக இருக்கிறது. ஆனால், திருஅவை, வேலையாளைப…
“ இயல்பாகவே ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிரானதாக இருக்கும் என்னும் சமூக வாழ்வு பற்றிய புரிதலானது தவறானது. பணக்காரர்களும் ஏழைகளும் இயல்பாகவே விரோதமான மனநிலையுடன் தான் சமூகத்தில் வாழ முடியும் என்னும் புரிதல் சரியானது அல்ல. இத்தகையச் சிந்தனை, அறிவார்ந்த செயலும் அல்ல, உண்மையும் அல்ல. இருவரும் சமூகத்தில் சேர்ந்து பயணிக்க வேண்டியவர்கள் என்னும் புரிதலே உண்மையானது. ” என்று திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றி நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதாவது, பணக்காரர்கள் அல்லது முதலாளிகள் என்பவர்கள் ஒரு வர்கத்தைச் சேர்ந…
Social Plugin