Episode 111, DOCAT 50, நிரந்தர வேலை, நியாயமான ஊதியம்

ஒக்ஸ்பாம் (Oxfam) என்னும் அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40 விழுக்காட்டை ஒரு விழுகாட்டினர் கொண்டிருக்கிறார்கள். அது போல, சமுதாயத்தின் கீழ்மட்டதில் உள்ள 50 விழுக்காட்டினர் வெறும் 3 விழுக்காட்டைத் தான் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் பணக்காரர்களின் செல்வம் அதிகரித்து வருகிறது என்பதை அந்த ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் ஒரு விழுக்காட்டினர் வளர்ச்சியடைவதையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எனக் கூறப்படுகிறது. இத்தகைய பொருளாதார சீரற்ற நிலையை திருஅவையானது எதிர்க்கிறது.

இத்தகைய சூழ்நிலை நிலவும் போது, சமூகத்தில் உள்ள 50 விழுக்காட்டினரால், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று அர்த்தம். முதலாளிகள் ஈட்டும் லாபமானது தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றும் அதற்குப் பொருள் உண்டு. இல்லையென்றால், பெரும் செல்வம் புழகும் நிறுவனங்களில் சொற்பமானவர்களே தொழிலார்களாக இருக்கிறார்கள் என்றும் அதற்கு அர்த்தம் உண்டு. இத்தகையச் சூழலில், ஒரு விழுக்காட்டினர் பெருமளவில், அரசின் திட்டங்களைக் கட்டுப்படுத்துவார்கள். அவர்களின் வசதிகளுக்கேற்ப, புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். குடியாட்சி என்பது வெறுமனே ஒரு விழுக்காட்டினருடையதாக மாறும். இத்தகையச் சூழலைப் பற்றி Docat நூலின் 145 ஆவது எண் கூறுகிறது. அது பின்வரும் சிக்கல்களை கூறுகிறது.

Ø  தொழிலாளர்கள் சமூகத்தின் வளர்ச்சியில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்.

Ø  தொழிலாளர்கள் இயந்திரங்களாகப் பார்க்கப்பட்டார்கள். அவர்கள் மாண்புடன் நடத்தப்படவில்லை.

Ø  அவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

Ø  இவர்கள் அரசு அதிகாரத்தில் பங்கேற்கும் நிலை இல்லாமல் போகிறது. சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பங்கேற்கும் முழுக் குடிமகன்களாக இவர்களால் வாழ முடியவில்லை.

இத்தகைய சீரற்ற நிலையானது கண்டிக்கத்தக்கது என்று திருஅவை கூறுகிறது. இதைப் போக்குவதற்கான முயற்சிகளில் அரசுகள் ஈடுபட திருஅவை கேட்டுக் கொள்கிறது.

Docat நூலின் 146 ஆவது எண்ணானது, வேலைவாய்ப்பு உறுதியைப் பற்றிப் பேசுகிறது. தேவையில் இருப்பவர்களைக் காணும் போது, அவர்களைக் கிறிஸ்துவாகக் கண்டு உதவி செய்ய வேண்டும். இன்றையச் சூழலில் உரிய ஊதியம் கிடைக்காமலும் அல்லது வேலையின்மையாலும் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் அமைப்புசாரா தொழில் செய்யும், கூலித்தொழிலாளர்கள் இத்தகைய நிலையில் இருக்கிறார்கள். மேலும் நிரந்தரமான தொழில் இல்லாததால் அவர்களின் அன்றாட வாழ்வு கூட சிக்கல் மிக்கதாக இருக்கிறது.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பின்வருமாறு கூறுகிறார்: “பணம் ஈட்டுவதற்கான தொழிலோ வேலையோ இல்லாமல், அரசு அல்லது பிற மனிதர்கள் அளிக்கும் இலவசங்களை எதிர்பார்த்து வாழும் நிலையானது மனித மாண்பிற்கு எதிரானது. இது அவருடைய குடும்ப வாழ்வை பாதிக்கிறது, சமூக வாழ்வை பாதிக்கிறது. மேலும் பெரும் உளவியல் மற்றும் ஆன்மீக உளைச்சலுக்கு அவர் உள்ளாகிறார்.

மேலும் திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: “குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகாக இருப்பதோடு, அது சமூகத்தின் நன்னெறியை கட்டிக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே வேளையில், குடும்ப வாழ்வு வேலையோடு பிணைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் வேலை செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தால் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். மேலும், மனிதர்கள் வேலையின் முக்கியத்துவத்தை குடும்பத்தில் வைத்துத்தான் கற்றுக் கொள்கிறார்கள்.

நிரந்தர வேலை, நேர்மையான கூலி ஆகியவை மனித மாண்போடும், மனிதரின் சமூக வாழ்வோடும், அதிகார பங்கேற்போடும் தொடர்புடையவை. 



Post a Comment

0 Comments