பொதுநலம் பற்றி நாம் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். குறிப்பாக இயற்கை வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமானது என்பதைப் பற்றியும் அறிந்தோம். அதே வேளையில் தனிச்சொத்துரிமையை திருச்சபை ஆதரிக்கிறது. தனிச்சொத்துரிமை என்பது மனித மாண்புடன் தொடர்புடையது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜாண் பால் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் : “ தன்னுடையது என்று எதன் மீதும் உரிமை கொண்டாட முடியாத மனிதர், தன்னுடைய உழைப்பால் தனக்குத் தேவையானவற்றை சேகரிக்கும் வாய்ப்பற்ற மனிதர், அன்றாட உணவுக்காகவும் மற்று தேவைகளுக்காகவும் சமூக அமைப்பையும் அதை கட்டுப்படுத்துபவர்களையும் நம…
“ ஒவ்வொரு மனிதருக்கும் , மக்கள் யாவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே கடவுள் மண்ணுலகையும் அதில் உள்ள அனைத்தையும் ஆக்கினார் . எனவே படைப்பு நலன்கள் அனைத்தும் நீதியை வழிகாட்டியாகவும் அன்பைத் துணையாகவும் கொண்டு , சரிசமமாக எல்லா மனிதருக்கும் உரியதாக இருக்க வேண்டும் ” என்று இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின், இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டின் 59 ஆம் எண் கூறுகிறது. கடவுள் உலகைப் படைத்தார் என்றும் அதில் உள்ள அனைத்து வளங்களையும் அவரே உருவாக்கினார் என்பதும் நமது விசுவாசம். இப்படியாக படைக்கப்பட்டவை அனைத்தும் அனைவருக்கும் சொந்தமாக இருக்க வ…
கடந்த அத்தியாயத்தில் பொதுநலத்திற்கான வரையறையைப் பார்த்தோம். அதாவது, “ குழுக்களும் தனி உறுப்பினர்களும் தத்தம் நிறைவை அதிக முழுமையோடும் மிக எளிதாகவும் அடைவதற்கு உதவுகின்ற சமூக வாழ்வுச் சூழ்நிலைகளின் தொகுப்பே பொதுநலன் என்றழைக்கப்படுகிறது. ” இவ்வரையறையை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டின் 26 ஆம் எண்ணில் காண்கிறோம். தனிமனிதர்கள் நன்மை புரிவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். “ நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம் ” ( எபே 2 :10) என்று புனித பவுல் கூறுவதை நாம் அறிவோம…
Social Plugin