Episode 116 DOCAT 55, நியாயமான கூலி -1

இன்றய தினம் Docat எண் 154 எண்ணில் காணப்படும் நியாயமான கூலி என்னும் பொருளாதரக் கருத்தைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

உலகின் அனைத்து நலன்களும் அனைத்து மனிதர்களுக்கும் உரிமையானது என்பதைப் பற்றியப் படிப்பினையில் திருஅவைத் தெளிவாய் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளானவை நீக்கப்பட வேண்டும் என்பது திருஅவையின் படிப்பனை.

நீங்கள் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர் மற்றும் குற்றச்சுமத்துபவர் ஆகிய இருவரும் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று முதுமொழு ஒன்று கூறுகிறது. இம்முதுமொழியானது, ஒருவரின் நியாயத்தை மட்டும் கேட்டு விட்டு, மற்றவர்களை தீர்ப்பிடக் கூடாது என்பதைப் பற்றிக் கூறுகிறது. இது பொருளாதாரத்தைப் பகிர்வதைப் பற்றியக் கொள்கைக்கும் பொருந்தும். சந்தைப் பொருளாதாரம் என்பது இன்றைய நியதியாக இருப்பதை நாம் அறிவோம். உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் போன்றவை 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நுழையத் தொடங்கின. அரசு வேலைகள், தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்தல், சொந்த நிலத்தில் வேலை செய்து அதிலிருந்து கிடைக்கும் லாபத்தில் வாழ்தல் போன்ற மரபு சார்ந்த முறைகள் 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் மாற்றத்தைக் கண்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் ஆகியவை இன்றுப் பெருகி வருகின்றன. சிறு வணிகங்களானவை பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம். இச்சூழலில், தொழிலாளர்களின் வேலையைச் சுரண்டுதல் என்னும் முறையும் அதிகரித்திருக்கிறது. தொழிற்புரட்சிகளின் பலனாக, வேலை நேரம் எட்டு மணி நேரம் என்பது அரசுகளால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அது இன்று பெருந்நிறுவனங்களில் பின்பற்றப்படுவதில்லை. அது 12 மணி நேரம் 14 மணி நேரம் என அதிகரித்திருக்கிறது. இது மனித மாண்புக்கு எதிரானது என்பதை திருஅவையானது கூறுகிறது.

சந்தைப் பொருளாதாரம் என்று இன்றையப் பொருளாதாரத்தைக் கூறுவார்கள். பங்குச் சந்தைப் போன்றவை இன்று மனிதப் புழக்கத்தில் உள்ள சொற்கள். இந்தச் சந்தைப் பொருளாதாரத்தில், இரு நிறுவனங்கள் தங்களுக்கிடையே ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் அவ் ஒப்பொந்தத்தில் உள்ள விதிமுறைகளை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அநீதிகள் நேரும் போது, அதை சரிசெய்வதற்காக அவர்கள் வழக்கறிஞர்களையும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அரசின் சட்டத்திட்டங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இத்தைய நிலையானது, கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் முதளாளிக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் நடப்பதில்லை. தொழிளாளிகள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி அவர்கள் உரிமைகளைப் பற்றி அறிந்திருந்தாலும், அதைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட உதவிகள் இல்லாமல் போகிறது. அது போல, எதிர் கேள்வி கேட்டால் தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்னும் அச்சமும் நிலவுகிறது. இத்தகையச் சூழலில் சந்தைப் பொருளாதாரத்தில், தொழிலாளிகள், தொழிற்புரட்சிக்கு முன்னர் நிலவிய நிலை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் வேலையானது சுரண்டப்படுகிறது. அதிக வேலை குறைவானச் சம்பளம் போன்ற நிலையும் நிலவுகிறது. நிரந்தரமற்ற வேலை என்பதும் சிக்கலாக உள்ளது.

தொழிலாளர்களை சுரண்டுதல் பற்றி திருஅவை, தொழிலாளிக்கு நியாயமாச் சென்று சேர வேண்டிய கூலியை வேண்டுமென்றே குறைத்தல், தொழிலாளர்களை சுரண்டுதல் என்று அறியப்படுகிறது என்கிறது.

இந்நிலை நீங்குவதற்காக அரசு சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று திருஅவை கூறுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்னும் போர்வையில் தொழிலாளர்களைச் சுரண்டும் போக்கு நியாயமானது அல்ல என்று திருஅவை அழுத்தமாகக் கூறுகிறது.

ஏழைகளும் வலுவில்லாதவர்களும் நீதி மற்றும் சமத்துவத்திற்காகத் தாகம் கொள்கிறார்கள். ஆனால் வலுவானவர்கள் இதைச் செவி கொடுத்துக் கேட்பதில்லை என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். 



Post a Comment

0 Comments