"இயேசுவின் கனவு" இசைக்குழு துவக்கவிழா

க்கலை மறைமாவட்ட சீரோ மலபார் இளையோர் இயக்கத்தின் (SMYM) சார்பாக JESUS DREAMZ Music Band என்ற பெயரில் இசைக்குழு தொடங்கப்பட்டுள்ளது. இதனுடைய தொடக்க நிகழ்வு 2022 அக்டோபர் 19 அன்று தெற்றியோடு ஆசிர் வித்யாலயா பள்ளி வளாக அரங்கத்தில் மாலை 6.30 மணியளவில் ஆரம்பமானது.  SMYM மறைமாவட்ட துணைச்செயலர் மெர்னிஷா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். SMYM மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் இதற்தகான நோக்கம் குறித்தும் இதனுடைய அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் அறிமுக உரை வழங்கினார். இயக்குநர் தந்தை பேசுகையில் இந்த இசைக்குழு மூலம் இளையோர்களின் திறமைகளை மேலும் வலுபடுத்தமுடியும், இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக திட்டமிடபட்டது தற்போது அதற்கான ஒரு தொடக்கம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்”.  தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பவ்வத்துபறம்பில் அவர்கள் தொடக்க உரை வழங்கி ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடக்கி  வைத்தார். குருகுலமுதல்வர் தந்தை பேசுகையில் “இந்த இசைக்குழு மேலும் வளர்ந்து மறைமாவட்டத்தினுடைய எல்லா இடங்களிலும் இதனுடைய நோக்கத்தை அறிய செய்ய வேண்டும், பாடல் பாட திறமையுள்ள இளையோர்களை இக்குழுவில் சேர்த்து மறைமாவட்டத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்று கூறினார்”. தொடர்ந்து இசைநிகழ்சி ஆரம்பமானது. பினனர் மாலைக்கோடு ஆலய SMYM உறுப்பினர் நீது பரதநாட்டியம் ஆடினார். இடையே பொங்கல் திருநாளை மையபடுத்தி அருட்தந்தை றோபின் ஜோஸ் அவர்களால் எழுதப்பட்டு, SMYM உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட  நடனத்திற்கான முன்னோட்டம் ஒளிபரப்பபட்டது, சீனாய் இருமாத இதழின் இணையவழி  முதல் பிரதி வெளியிடப்பட்டது, அம்மா உறவுமுறையை வெளிப்படுத்தும் நடனமும், நித்திரவிளை மறைவட்ட இளையோர்களின் குழுநடனமும் இந்நிகழ்ச்சிகளை மேலும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. முடிவில் SMYM மறைமாவட்ட ஆலோசகர் ஜெசின் அனைவருக்கும் நன்றி கூறினார். இயக்க கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது. இந்த இசைக்குழுவில் மெர்பின், அமித், டோம், அபிஷால், அஜின், அஞ்சலி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். முடிவில் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் SMYM மறைமாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தெற்றியோடு புனித பவுல் ஆலய பங்குமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள் முன்னாள் பொறுப்பாளர்கள், மற்றும் இளையோர்கள்  பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments