Episode 100, DOCAT 39, திருமணம் -1

 Faith and Life வலைத்தொடரின் நூறாவாது எப்பிசோட் இது. இளையோர் மனங்களில் விசுவாசத்தின் விதைகளை விதைக்க வேண்டும் என்னும் உறுதியே இதுவரை எங்களைக் கொண்டு வந்திருக்கிறது. நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.” (2தெச 3:13) “நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்” (எபே 2:10) போன்ற பவுலடியாரின் இறைவார்த்தைகள் எங்களைத் தொடர்ந்து முன்நோக்கிச் செல்லத் நிர்பந்திக்கிறது. மேலும் புனித பவுல் கூறுகிறார், நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” (1கொரி 9:16). இயேசுவின் இறைவார்த்தை அறிவிக்காவிடில், திருச்சபையும் இல்லை, கிறிஸ்தவ விசுவாசமும் இல்லை. ஆகையால் நாங்கள் தொடர்ந்துப் பயணிக்கிறோம். தொடர்ந்து ஆதரவுத் தர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இத்தருணத்தில் தக்கலை இளையோர் இயக்கப்பணிகளில் எப்பொழுதும் துணை நிற்கும் மேதகு ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

இன்றைய தினம் DOCAT நூலின் 123 ஆவது எண்ணில் கூறப்படும் திருமணம் பற்றிய கருத்துக்களை காண இருக்கிறோம்.

திருமணம் என்றால் என்ன?

நாம் வாழும் சமூகச் சூழலில் திருமணத்தைப் பற்றிய பலவாறான கருத்துக்கள் நிலவுவதை நாம் அறிவோம். கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பொறுத்தவரைக்கும், திருமணம் என்பது கடவுள் விரும்பி நிறுவிய அருளடையாளம் என்பதை ஏற்றாக வேண்டும். உலகில் கடவுள் விரும்பிய ஒன்றை செய்வதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது Faith and life சீரீஸ் இல் பலமுறை நாம் வலியறுத்திக் கூறியிருக்கிறோம். பிறரால் எவராலும் செய்ய முடியாத ஒன்றை செய்வதற்ககாக, நம்மால் மட்டும் நிறைவேற்றக் கூடிய ஒன்றைச் செய்வதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய இடத்தில் வேறெவரையும் வைக்க முடியாது. அத்தகைய தனித்துவத்துடன் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறே திருமணம் என்பதும் கடவுள் விரும்பி ஏற்பாடு செய்யும் ஒன்று. ஆணும் பெண்ணுமாக சேர்ந்து வாழ வேண்டும் என்று கடவுள் தொடக்கத்திலேயே விரும்பினார் என்பதை நாம் திருவிவிலியம் வழியாக அறிய வருகிறோம்.

ஆக திருமணம் என்பது மனித ஏற்பாடு அல்ல, மறாக கடவுள் அமைத்துத் தந்திருக்கும் ஒரு ஏற்பாடு. கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி, அதாவது Catechism of the Catholic Church சுருக்கத்தில் CCC என அழைக்கப்படும் நூலின் 1601 ஆவது எண் திருமணத்தின் நோக்கத்தைப் பற்றி, அதாவது purpose பற்றிக் கூறுகிறது. இதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் வருகின்றன.

1.   தம்பதியரின் நலன்

2.   குழந்தைகளைப் பெற்றெடுத்து அறிவு புகட்டி வளர்த்தல்.

இதில், திருமணத்தின் சாராம்சம், அதாவது essence என்ன என்பதைப் பற்றியும் DOCAT நூல் கூறுகிறது. தம்பதியர் ஒருவரை மற்றவருக்கு அளிக்கும் வாக்குறுதி இருக்கிறது, அதாவது Promise செய்கிறார்கள். அவர்கள் என்ன Promise செய்கிறார்கள்? ஒருவரை ஒருவர் நிபந்தைனையின்றி அன்பு செய்வோம், ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையுடன், அதாவது faithful ஆக இருப்போம். இந்த promise அளிப்பதேத் திருமணம். இதுவே திருமணத்தின் Essence அல்லது சாராம்சம் எனலாம்.

நாம் திருமணத்தின் purpose பற்றியும் பற்றியும் essence பற்றியும் நாம் பார்த்தோம். இவ்வாறாக திருமணத்தின் சாரம்சமாக விளங்குகின்ற ஒருவருக்கு ஒருவரோடான நிபந்தனைகளற்ற அன்பு மற்றும் நம்பிக்கை சில உள்ளியல்புகளைப் பெற்றிருக்கிறது. அவையாவன

1.   திருமண உறவு பிரிக்க முடியாதது

2.   தம்பதியருக்கிடையேயான நிபந்தனையற்ற அன்பு வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க வேண்டும். அதாவது, திருமணம் என்பது partnership அல்ல, அது living together அல்ல. அது சில நாட்கள் தாண்டி முறிக்கக் கூடிய contract அல்ல. திருமணத்தில் மனங்களில் பரிமாற்றம், உறவுகிளின் பரிமாற்றம், உணர்வுகளின் பரிமாற்றம், உடல்களில் பரிமாற்றம், அடுத்தத் தலைமுறைக்கு வாழ்வை அளிக்கும் உயிரின் பரிமாற்றம் ஆகயவை நடக்கின்றன. இவற்றில் ஏற்படும் பிளவு இயல்பாகவே மனிதரையும் உறவுகளையும் அடுத்தத் தலைமுறையையும் பாதிக்கிறது.

3.   திருமண உறவில் பிரிவு என்பது, தம்பதியருள் ஒருவர் இறந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது.

இயேசு கூறியதை மனதில் வைப்போம்: “கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” (மத் 19:6).




Post a Comment

0 Comments