தலைமைத்துவ பயிற்சி முகாம் ஆகஸ்ட் 19, 20, 21

சீரோ மலபார் இளையோர் இயக்கம், தக்கலை சார்பாக தலைமைத்துவ பயிற்சி முகாம் ஆகஸ்ட் மாதம் 19, 20 & 21 ஆகிய தேதிகளில் தக்கலை சங்கமத்தில் வைத்து நடைபெற்றது. 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் பெயர் பதிவு ஆரம்பமானது.  தொடர்ந்து 10:00 மணிக்கு பரைக்கோடு கிறிஸ்து அரசர் ஆலய இளையோர்கள் இறைவணக்கம் பாடினர். அதைத்தொடர்ந்து மறைமாவட்ட செயற்குழு ஆலோசகர் ஜெஸின் அனைவரையும் வரவேற்று பேசினார். அதை தொடர்ந்து இயக்குனர் தந்தை தொடக்க உரை ஆற்றினார். பின்னர் காலை 10:30 மணி அளவில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது. சுல்தான் பேட்டை இளையோர் இயக்க இயக்குனர் அருட்தந்தை பிரபின்SDB  அவர்கள் முதல் வகுப்பை நடத்தினார்.  “சமுதாயத்தில் இளையோர்கள் எப்படி வாழ வேண்டும் என்றும் அவர்கள் சந்திக்கின்ற தடைகள் குறித்தும், இடையூறுகள் குறித்தும்,  சமூகத்தில் எப்படி புதிய மாற்றத்தை கொண்டு வரலாம்? திருச்சபை இன்றைய இளையோர்களிடத்தில் எதிர்பார்பது என்ன?” என்று வகுப்புகள் நடத்தினார். அன்று மாலை 6:30 மணியளவில் அருட்தந்தை.அருள் ஆண்டனி அவர்கள் நடுவராக பங்கேற்ற  இன்றைய உலகில் ‘சமூக ஊடகங்கள் நன்மையா? தீமையா?’  குறித்து மாபெரும் விவாதம் நடைபெற்றது. இரவு  8:30 மணிக்கு இரவு உணவு பின் சிறு விளையாட்டுகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.      

20ஆம் தேதி சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக பயிற்சியும் அதை தொடர்ந்து 7 மணி அளவில் இயக்குனர் தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அது தொடர்ந்து காலை 9 .30 மணிக்கு அருட்தந்தை.ஜாண் மார்சல் அவர்கள் பயிற்சி வகுப்பினை வழிநடத்தினர். இதில் “தகவல் பரிமாற்றம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் தனி திறமைகள் உண்டு, அதனை வெளிக்கொண்டு வருவது குறித்தும், நாம் தனிப்பட்ட திறமைகளை வெளிகொண்டு வருவது எப்படி என்றும், காதல் விவகாரங்களில் சமாளிக்கும் திறன்" குறித்து கலகலப்பான முறையில் பயிற்சி வகுப்பு நடத்தினார்.

அன்றைய தினம் மாலை 4:30 மணிக்கு அருட்தந்தை.ஜாண் மார்சல் அவர்கள் நடுவராக பங்கேற்ற மாபெரும் விவாத மன்றம் நடைபெற்றது. இதன் தலைப்பு இன்று  ‘நாம் காண்பது, கற்பது, அனுபவிப்பது காமமா? காதலா?" அதன் பின் இரவு 8 மணி அளவில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் பாடல் எழுதுதல், விளம்பரம் ஒப்புவித்தல் போன்றவை நடைபெற்றன. இரவு 10 மணி அளவில் அன்றைய தின நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணிக்கு காலை ஜெபம் நடைபெற்றது. மறைமாவட்ட ஆவணகாப்பாளர் பேரருட்தந்தை ஜோஷி குளத்துங்கல் அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் காலை 9:30 மணி அளவில் அருட்தந்தை.அருள் ஆண்டனி அவர்கள் பயிற்சி வகுப்பினை நடத்தினர். இதில் முக்கியமாக பலம், பலவீனம் எது என்பதை கண்டுபிடிக்கவும்  SWOT analysis  என்னும் சுய பரிசோதனை பயிற்சி நடைபெற்றது. மதியம் 1:00 மணி அளவில் பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மதியம் 2:00 மணி அளவில்  அனைவரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இயக்குனர் அருட்தந்தை. ஜோசப் சந்தோஷ் அவர்கள் நிகழ்ச்சிக்கான நோக்கம் குறித்து இதற்கான அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். மஞ்சாலுமூடு மறைவட்ட இயக்குனர் அருட்தந்தை.ரோபின் ஜோஸ் இளையோர்களை ஊக்கபடுத்தும் விதமாக எழுச்சியுரை ஆற்றினார். அதன் பின் மறைமாவட்ட துணை செயலர் மெர்னிஷா அனைவருக்கும் நன்றி கூறினார். பின் இயக்க கீதத்துடன் பயிற்சி வகுப்புகள் இனிதே நிறைவு பெற்றது. இதில் 35  இளையோர்கள் கலந்து கொண்டனர். திருச்சி டோன் போஸ்கோ வழிகாட்டி இயக்குனர் அருட்தந்தை அருள் ஆண்டனி மூன்று நாட்கள் உடனிருந்து  ஒருங்கிணைத்தார். இயக்குனர் அருட்தந்தை. ஜோசப் சந்தோஷ் அவர்கள் மற்றும் மறை மாவட்ட பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
















Post a Comment

0 Comments