Episode 82, Docat 21 – கத்தோலிக்க சமூக படிப்பினையின் மூலக்கோட்பாடுகள் - 2

கடந்த அத்தியாயத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் மூலக்கோட்பாடுகள் பற்றிப் பார்த்தோம். அவையாவன தனிமனித மாண்பு, பொதுநலம், துணை அமைப்புமுறை மற்றும் ஒருமைப்பாடு. இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்திட இயலாது.

குடும்ப வாழ்வானது இந்த நான்கு மூலக்கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது எனலாம். குடும்பத்தில் தனிநபரானவர் அன்பு செய்யப்படுகிறார், பாதுகாக்கப்படுகிறார். அங்கே அவர் மாண்புடன் நடத்தப்படுகிறார். தனிநபரானவர் அன்புச் செய்யப்பட வேண்டும், அவர் இருக்கும் நிலையில் அவர் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். அதுபோலவே, தனிநபர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பாதுகாப்பை உணர வேண்டும். அதாவது இவ்வீட்டில் அல்லது நாட்டில் வாழ்வது பாதுகாப்பானது எனும் உணர்வு உள்ளூர இருக்க வேண்டும். இவைகள் எல்லாம் தனிநபர் ஒருவரின் முழுமையான, ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம். இதுவே தனிநபரின் மாண்பை நிர்ணயிக்கிறது. இந்நிலை குடும்பத்தில் சரியான முறையில் நடைமுறைக்கு வருகிறது. நாம் அதிகமாக அன்பு செய்யப்படுவது குடும்பத்தில்தான். நாம் அதிகமாக பாதுகாப்பாக உணர்வது குடும்பத்தில்தான்.  

அடுத்ததாக, குடும்பத்தில் ஒருமைப்பாடு அவசியமாக இருக்கிறது. ஒருவர் மற்றவரோடு ஒத்துழைத்து, உணவைப் பகிர்தல், நேரத்தை பகிர்தல், உணர்வுகளைப் பகிர்தல், இன்னொருவருக்காக ஒருவர் தியாகத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் வழியாக ஒருமைப்பாடானது குடும்பத்தில் வாழ்கிறது. நமது அம்மா அப்பா வாழ்வில் ஏற்கும் ஏராளமான தியாக செயல்கள் வழியாக நாம் வாழ்கிறோம் என்பதை அறிவோம். அவர்கள் குடும்பமானது சேர்ந்திருக்க வேண்டும், குழந்தைகளுள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதுவே ஒருமைப்பாடு என்று அழைக்கப்படுகிறது.

மேலும் தன்னலத்தை மட்டும் நாடாமல் குடும்ப உறவினர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக உழைக்கிறார்கள். அனைவருடைய நலனும் பேணப்படுவதால் பொதுநலமானது பேணப்படுகிறது.

குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்க கல்வி அளிப்பதிலும் துணைநிலை அமைப்பானது செயல்படுகிறது. அம்மா குழந்தைக்குத் தேவையானதை செய்து கொடுக்கிறார். குழந்தையை பெற்றெடுத்தல், அதைப் பேணுதல், உணவூட்டுதல் ஆகியவற்றையும் இன்னும் பலவற்றையும் தாய் செய்கிறார். அது போல அப்பாவும் அக்குழந்தைக்கு தேவையானவற்றை செய்கிறார். ஒருவர் குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு ஆயத்தப்படுத்தும் போது, இன்னொருவர் குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு கொண்டு பேய் செர்க்கிறார். இவ்வாறாக குழந்தை வளர்ப்பிலும் குடும்பத்தின் பொறுப்புகளை வகிப்பதிலும் குடும்ப உறுப்பினர் மத்தியில் துணைநிலை அமைப்பானது செயல்படுகிறது. இவ்வாறாக குடும்பத்தில் இந்த நான்கு மூலக் கோட்பாடுபகளும் சரியாக செயல்படும் போது அக்குடும்பமானது நல்ல முறையில் அமையும். 

குடும்ப அமைப்பானது சமூக வாழ்விற்கான மாதிரியாக இருக்கிறது. குடும்பம் எப்படி தனிநபரின் மாண்பைப் பேணுகிறதோ, பொதுநலம் காக்கிறதோ, ஒற்றுமையாக இருக்கிறதோ, அவரிவரின் கடமைகளை சரிவரச் செய்கிறதோ அது போல சமூகமும் இயங்க வேண்டும்.

சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் பொறுப்பிமிக்கவர்களாக ஒருவர் மற்றவருடைய நலனைப் பேண வேண்டும். கடவுள் அன்பையும் சகோதர அன்பையும் அடிப்படையாகக் கொண்டு வாழும் ஒவ்வொரு மனிதரும் பிறருக்கு உதவ கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே; ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார்என்று தோபித்து தனது மகன் தோபியாவுக்கு அறிவுரை கூறுகிறார். (தோபித் 4: 7).

பொதுநலம் பேணாத மனிதர் நல்லவராக இருக்க முடியாதுஎன்று புனித தாமஸ் அக்யூனாஸ் கூறுகிறார்.

பொதுநலம் என்றால் என்ன?

குழுக்களும் தனி உறுப்பினர்களும் தத்தம் நிறைவை அதிக முழுமையோடு மிக எளிதாகவும் அடைவதற்கு உதவுகின்ற சமூக வாழ்வுச் சூழ்நிலைகளின் தொகுப்பே பொதுநலன் என்றழைக்கப்படுகிறதுஎன வத்திக்கான் திருச்சங்கத்தின் இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டின் 26 ஆம் எண் கூறுகிறது.




Post a Comment

0 Comments