Episode 120 DOCAT 59, சந்தைப் பொருளாதாரம்

கடந்த அத்தியாயத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி நாம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் சந்தைப் பொருளாதாரம் குறித்தும் அதைச் சார்ந்த அறத்தைப் பற்றியும் பார்க்க இருக்கிறோம்.

இன்றைய உலகில் சந்தைப் பொருளாதாரம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கப் படுகிறது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்வருமாறுப் புரிந்து கொள்ளலாம். பொது இடத்தில் அல்லது பொது டிஜிட்டல் பொதுத் தளங்களில் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. அவ்விடத்தில், அப்பொருட்கள் மீதான விலை பேசப்படுகின்றன. விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரச் சந்தை என இது அழைக்கப்படுகிறது. அரசின் கட்டுப்பாடுகள் இங்குப் பெருமளவில் இருப்பதில்லை. இத்தகையப் போக்கானது ஆபத்துக்களை உள்ளடக்கியது என்பதைத் திருஅவையானது வலுயுறுத்தி வருகிறது. மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசானது, மக்களின் நலன் பேணும் வகையில் செயல்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு தரும் உரிமையாக இருக்கிறது. இதை நிறைவேற்ற வேண்டியக் கடமையானது அரசுக்கு உண்டு. மக்களின் பொருளாதார நலன் பேணுவதில் அரசுக்கு முதன்மையானப் பங்கு உண்டு. அனைவரும் அனைத்தும் பெறுவதற்கான வாய்ப்புகளையும் பொருளாதார கொள்கைகளையும் வகுக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது., சுதந்திரச் சந்தைப் பொருளாதாரனது இதை அனுமதிப்பதில்லை. அரசின் தலையீடு இருந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைந்துப் போகும் என்னும் எதிர் வாதம் வைக்கப்படுகிறது. இரண்டாவதாக, அதீதமான வளர்ச்சியையும் பெரும் செல்வத்தையும் விரும்பும் பெரும் முதலாளிகள் அரசின் குறிக்கீடுகளையும் கட்டுப்பாடுகளையும் விரும்புவதும் இல்லை. மூன்றாவதாக, பல வேளைகளில் உலக நாடுகளின் பொருளாதார தர வரிசையில் முதல் இடத்துக்குச் செல்வதற்கு பெரும் முதலாளிகளின் பெரும் வளர்ச்சியானது மவுனமாக அனுமதிக்கப்படுகிறது. இறுதியாக, பெரும் முதலாளிகள் கொடுக்கும் பணத்தால், அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன. இதனால், அவர்கள் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படும் போக்கும் இருக்கிறது. சந்தைப் பொருளாதாரமானது முறையாக செயல்படுத்துவதில் சிக்கல்கள் அதிகம் இருக்கின்றன. அது மக்கள் நலனைப் பேணுகிறதா என்னும் கேள்வி எழுகிறது.

சந்தைப் பொருளாதாரமானது செயல்திறன் மிக்கது என்றாலும் அதன் கட்டுப்பாடுகளற்றச் செயல்பாடானது, நாட்டு மக்களின் நலனைப் பேணுவதில் அதிகம் அக்கறைக் கொள்வதில்லை. சந்தைப் பொருளாதாரனது ஏற்புடையதாக மாற வேண்டும் என்றால் அது அறத்துடன் செயல்பட வேண்டும். அதில் அரசின் கட்டுப்பாடுகள் பெருமளவில் இருக்க வேண்டும் என்று Docat 160 ஆவது எண்ணில் கூறப்படுகிறது.

அரசானது, துயர், நோய், பல விதமான உடல் மற்றும் உடல்-உள்ள பலவீனங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரமானது, அதற்கே உரிய சட்டங்களால் இயக்கப்படுவதாக இருந்தாலும், அது கடவுளின் கட்டளைக்கு உட்பட்டது என்பதையும் மறக்கக் கூடாது. மனிதரின் நடவடிக்கைகள் அனைத்தும் கடவுளின் சட்டத்திற்கு உட்பட்டவையே.

திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் பின்வருமாறு கூறுகிறார்:

சந்தையில் இடம் பெற முடியாத வேறு பல மனித தேவைகள் உள்ளன. சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளில் நீதியும் உண்மையும் இடம் பெற வேண்டும். அவை மனிதரின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரச் சுமைகளை மனிதர் மேல் சுமத்தி அவற்றால் மனிதர் அழிந்து போகும் சூழல் உருவாகாமல் இருக்க அவை விழிப்புடன் இருக்க வேண்டும். ஆக சந்தைப் பொருளாதாரமானது, நீதியாலும் உண்மையாலும் வழிநடத்தப்பட வேண்டும் என்பதைத் திருத்தந்தை வலியுறுத்துகிறார்.



Post a Comment

0 Comments